பிச்சைக்காரர் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள்! தினமும் சாப்பிட்டு மகிழ்ந்ததாக அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பிச்சைக்காரரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

187 நாணயங்கள்

கர்நாடக மாநிலத்தின் லிங்காசுகரை சேர்ந்த தியாமப்பா ஹரிஜன் (58). இவர் பிச்சை எடுத்து வரும் நிலையில் திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதையடுத்து மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது வயிற்றுக்குள் 187 பண நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சைகள் மூலம் நாணயங்கள் அகற்றப்பட்டது.

ஜீரணமாகும் என நினைத்துள்ளார்

இது குறித்து மருத்துவர் ஈஷ்வர் கூறுகையில், பிச்சை எடுத்து கிடைக்கும் நாணயங்களை வாய்க்குள் போட்டு விழுங்கும் பழக்கம் தியாமப்பாவுக்கு இருந்திருக்கிறது. அப்படி சாப்பிடுவதால் அது ஜீரணமாகும் என நினைத்திருக்கிறார்.

அவருக்கு schizophrenia எனப்படும் பிளவுபட்ட மனநோய் இருந்திருக்கிறது. நாணயங்களை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கும் போது ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.

அனைத்து நாணயங்களை வயிற்றில் இருந்து எடுக்க 2 மணி நேரம் ஆனது என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.