ரயிலுடன் மோதி மினி பஸ் விபத்து; சாரதி உயிரிழப்பு! – யாழ். அரியாலையில் சோகம்.

யாழ்ப்பாணம், அரியாலை ஏ.வி. வீதியில் ரயிலுடன் மோதி மினி பஸ் விபத்துக்குள்ளானதில் குறித்த பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயிலுடன் மினி பஸ் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.