சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும்?

மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளில் அதிக அளவில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரைச் சத்து இருக்கும் என்பதால், கிழங்கு வகைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் பனங்கிழங்கு மட்டும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.

பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதேபோல பனங்கிழங்கில் உள்ள சில நுண்ணூட்டச்சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

எனவே அச்சமின்றி இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

பனங்கிழங்கில் மிக அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இது மலச்சிக்கலை சரிசெய்து வயிற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

பனங்கிழங்கில் அதிக அளவிலான புரதமும் நார்ச்சத்தும் இருப்பது மட்டுமல்லாது, நிறைய உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய உடல் எடை அதிகரிக்கும்.

இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினை தான் ரத்த சோகை.

உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும்.

ரத்த ஓட்டம் குறைவாக இருப்தே பல பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும் உண்டு.

உடல் பலவீனமாக உள்ளவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

பனங்கிழங்கை காய வைத்து பொடி செய்து அந்த மாவை எடுத்து, காலை நேரத்தில் கூழ் அல்லது கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் வலிமை பெறும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.