த்ரில் வெற்றி… இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்.

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் அவமான தோல்வியை சந்தித்தது.

அதனால் இத்தொடரில் வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டிசம்பர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அனமல் ஹைக் 11, லிட்டன் தாஸ் 7, சாண்டோ 21, சாகிப் அல் ஹசன் 8, ரஹீம் 12 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

அதனால் 69/6 என ஆரம்பத்திலேயே அந்த சரிந்த போது முதல் போட்டியை போலவே அஜாக்ரைதையாக செயல்பட துவங்கிய இந்திய பவுலர்களை அடுத்ததாக ஜோடி சேர்ந்து அற்புதமாக எதிர்கொண்ட முகமதுல்லா – மெஹதி ஹசன் ஆகியோர் நங்கூரத்தை போட்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

நேரம் செல்ல அதிரடியாகவும் செயல்பட்ட இந்த ஜோடி இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 47 ஓவர்கள் வரை அபாரமாக பேட்டிங் செய்து 148 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த போது அரை சதம் கடந்து சிறப்பாக செயல்பட்ட முகமதுல்லா 7 பவுண்டரியுடன் ஒரு வழியாக 77 (96) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றியை படுத்த மெஹதி ஹசன் கடைசி வரை அவுட்டாகாமல் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் அபார சதமடித்து 100* ரன்கள் எடுக்க இறுதியில் நசும் அஹமத் 18* (11) ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் 271/7 என்ற பெரிய ரன்களை வங்கதேசம் குவித்து அசத்தியது.

பந்து வீச்சில் கடைசி நேரங்களில் சுமாராக செயல்பட்டு இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களை எடுத்தார். அதை தொடர்ந்து 272 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்த நிலையில் விராட் கோலி 5, ஷிகர் தவான் 8 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்கணங்களில் நடையை கட்டிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் 11 (19) கேஎல் ராகுல் 14 (28) என அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

அதனால் 65/4 என ஆரம்பத்திலேயே திண்டாட்டிய இந்தியாவுக்கு அடுத்ததாக அக்சர் படேலுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் நங்கூரத்தை போட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதில் பொறுப்புடன் செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 5வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் அபார பார்மசிப் அமைத்து முடிந்த அளவுக்கு வெற்றிக்கு போராடிய போது 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 82 (102) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களில் அவருடன் போராடிய அக்சர் பட்டேலும் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 56 (56) ரன்களிலும் ஷார்துல் தாகூர் பொறுப்பின்றி 7 ரன்னிலும் அவுட்டானதால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவுக்கு வேறு வழியின்றி கேப்டன் ரோகித் சர்மா காயத்துடன் களமிறங்கினார்.

அப்போது கடைசி 7 ஓவரில் 64 ரன்கள் தேவைப்பட்ட போது எதிர்ப்புறமிருந்த தீபக் சஹார் பொறுப்பின்றி 11 (18) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் ரோஹித் சர்மா காயத்துடன் போராடிய நிலையில் 47வது ஓவரை முழுமையாக எதிர்கொண்டு சிங்கிள் மாற்றாத சிராஜ் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் காயம் பட்ட சிங்கத்தைப் போல முடிந்தளவுக்கு ரோகித் சர்மா போராடியதால் கடைசி ஓவர் இந்தியாவில் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்த தோல்விக்கு 6 விக்கெட்டுகளை எடுத்த பின் அஜாக்கிரதையாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் மற்றும் ரோகித் சர்மா காயமடைந்து விட்டார் என்று தெரிந்தும் மோசமாக செயல்பட்ட டாப் ஆர்டர் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.

மறுபுறம் முக்கிய நேரங்களில் அபாரமாக செயல்பட்ட வங்கதேசம் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று கத்துக்குட்டியாக இருந்தாலும் சொந்த மண்ணில் நாங்கள் என்றுமே புலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

ஆனால் முஸ்தஃபீசுர் ரகுமான் விசிய அந்த ஓவரில் 0, 4, 4, 0, 6 என முழு மூச்சை கொடுத்து போராடிய ரோகித் சர்மா 15 ரன்களை எடுத்து 3 பவுண்டரி 5 சிக்சருடன் 51* (28) ரன்கள் எடுத்த போதிலும் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க தவறியதால் 50 ஓவரில் 266/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

Leave A Reply

Your email address will not be published.