வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது
• எதிர்வரும் 16 ஆம் திகதி வல்லிபுரம் ஆழ்வார் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் தற்போது நாட்டிலுள்ள கொரோணா அச்ச நிலைமையில் ஆலய உற்சவத்தினை நடாத்துவது தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

பருத்தித்துறை பிரதேச செயலாளர், பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கோயில் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அன்னதானமடத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆலய உற்சவத்தில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பின்வரும் விடயங்களை இம்முறை நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

• கோயிலின் இரண்டு வாசல்களிலும் வைத்து பக்த அடியார்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.
• கற்பூரச்சட்டி, காவடி மற்றும் ஏனைய நேர்த்திகள் நிறைவேற்ற அனுமதி வழங்கப்படமாட்டாது.
• அன்னதானமடங்களில் அன்னதானமானது உணவுப்பொதிகளாக வழங்க வேண்டும்.
• புதிதாக வரும் வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. நிரந்தரமாக இருக்கும் வியாபார நிலையங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்
• மேலும் ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் அத்தோடு ஆலய வளாகத்திற்குள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள பக்தர்களை அனுமதித்தல் போன்றபல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.