வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களால் பணிபுறக்கணிப்பு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் காலை 11 மணிவரையும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குரிப்பிடத்தக்கது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது

தமது பணி நடவடிக்கைகளிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கைவிரல் அடையாள நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனை தவிர்த்து பழைய முறையின் படியே தாங்கள் கையொப்பம் இடுவதற்கான செயற்பாட்டை தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், தமது கோரிக்கை நிறைவேறாவிடில் போராட்டங்கள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரச சட்டங்கள் அனைவருக்கும் சமம் , எமக்கு மட்டும் ஏன் இந்த அநீதி, மற்றும் மன அமைதியுடன் பணிசெய்ய விடு போன்ற வாசகங்கள் அமைந்த பதாதைகளை ஏந்தி சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.