கடத்தப்பட்டுப் பத்து வருடங்கள் கடந்தும் எக்னலிகொடவுக்கு நீதி கிடைக்கவில்லை – சந்தியா கவலை

“எனது கணவரான பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த போதிலும் நீதிமன்றத்தில் இதுவரை நீதி கிடைக்காமையிட்டு கவலையடைகின்றேன்.”

– இவ்வாறு பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரகீத் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருக்கின்றார் என்று நான் அன்றும் கூறினேன். இன்றும் அந்த நம்பிக்கையுடன்தான் இருக்கின்றேன். அவரை நான் உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கின்றேன்.

பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தை காணாமல்போக விடாமல் பார்த்துக்கொள்வதுதான் எனது ஒரே இலக்கு. அவரை நான் உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றேன்” – என்றார்.

இதேவேளை, கார்டூன்கள் வரைவதற்காக பிரகீத் எக்னலிகொட பயன்படுத்திய பொருட்களையும், நீரிழிவு நோய்க்காக அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளையும் பிரகீத் எக்னலிகொடவின் நினைவுகளாக சந்தியா பாதுகாத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.