PFI அமைப்புடன் தொடர்பு.. கேரளாவில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

கேரளாவில் பல்வேறு இடங்களில் PFI அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் NIA சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை தமிழகத்திலும் நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர்.

இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

PFI அமைப்பை தடை செய்த பின்பும் சமூக வலைத்தளங்கள் மூலமாக PFI அமைப்புக்கு இணையாக மாற்று குழுக்கள் அமைத்து செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் வீடுகளில் கேரளா மாநிலம் கொல்லம் , ஆலப்புழ, வயநாடு, உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் 56 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கண்காணித்து வந்த குற்ற பின்னணி உள்ள நபர்களின் வீடுகளில் சோதனை. பல இடங்களில் மொபைல் போன்கள் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.