இந்திய ராணுவ வாகனங்களுக்கான இணையதளம் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல்.

காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ வாகனங்களுக்கான இணையதளம் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்துகிறது. இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையும் பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது. சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.