பிளே ஆப் வாய்ப்பை இழந்தது ஐதராபாத் அணி!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இம்பெக்ட் பிளேயர் அஷுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதன் விளைவாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து கன மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டி ரத்தானதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகாரபூர்வமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.