கொக்குவில் உள்ளக அரங்கில் , யாழ். பூப்பந்தாட்ட போட்டி முதன்மை ஆட்ட நிகழ்வு

யாழ். மாவட்ட பூப்பந்து ஜூனியர் முதன்மை ஆட்டம் 2022க்கான (JAFFNA DISTRICT BADMINTON JUNIOR CHAMPIONSHIP-2022)  சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு2022 , 29.12.2022 அன்று மாலை Jaffna bowling center (JBC) , கொக்குவில் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது.

WTBF ,இங்கிலாந்து கிளையின் அனுசரனையுடன் , யாழ்ப்பாண மாவட்டக் கிளை   WTBFன் ஏற்பாட்டில் , JDBA மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடன் இணைந்து  BADMINTON JUNIOR CHAMPIONSHIP- 2022 நடாத்தப்பட்டது.

அன்றைய தினம் , வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கேடயங்களும்,  வெற்றிச்சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் பாலன் முகுந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

யாழ்மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் காண்டீபன் , சுபாஸ்கரன் , தோமஸ் மற்றும் JBC court முகாமையாளர் சோமேஸ் ஆகியோரும் அன்றைய சிறப்பு அதிதிகளாக நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

யாழ்மாவட்டத்தின் வலிகாமம், வடமராட்சி,யாழ்ப்பாணம்,தென்மராட்சி வலயங்களைச் சேர்ந்த 350 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இம்முயற்சிக்கு பூப்பந்தாட்ட அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயல்படும் இலங்கை பூப்பந்தாட்டக்கிளையான WTBF மற்றும் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை (UK BRANCH- WTBF) ஆகியவை அனுசரனையளித்திருந்தன.

Leave A Reply

Your email address will not be published.