விபத்தில் சிக்கிய ‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகர்..

ஹாலிவுட்டின் மார்வெல் படமான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர் 2008-ம் ஆண்டு வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.

தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான ‘தி டவுன்’ படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜெர்மி ரென்னர் அமெரிக்காவின், நெவாடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டின் அருகில் இருந்த பனியை அகற்றும் போது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் படுகாயமடைந்த ரென்னரை விமானம் மூலம் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், ‘விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.