அசீம் ஒரு பச்சோந்தி என கூறிய விக்ரமன்..! கைத் தட்டல்களால் அதிர்ந்த அரங்கம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் திரைப்படங்கள், சின்ன திரைகளில் ஸ்டாராக ஜொலித்து வருகிறார்கள். தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசனில் வெற்றி நடை போட்டு வருகிறது. சீசன் 6 தொடங்கி சுமார் 85 நாட்களை கடந்து விட்டது.

எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை 21 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீசன் 6ல் தற்போது 13 போட்டியாளர்கள் வெளியேறிவிட எட்டு போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் இல் பார்க்கும் விதமாக லைவாக ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. இதனால் போட்டியாளர்கள் விளையாடுவதை நேரடியாக காண முடிகிறது.

இந்த பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய முதல் நாளில் இருந்து சண்டை இருந்து வருகிறது. இந்த சீசனின் விறுவிறுப்புக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோலார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா என மொத்தம் 13 போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜனனி வெளியேறிய போது குறைவான வாக்குகள் வாங்கிய போட்டியாளர்களை விட்டுவிட்டு ஜனனியை வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதேபோல் கடந்த வாரம் தனலட்சுமி வெளியேறிய போது மைனா, கதிரவன், ரட்சிதா போன்ற குறைந்த பங்கெடுப்பு உள்ள போட்டியாளர்களை விட்டுவிட்டு டிஆர்பிக்காக ஆக்ட்டிவாக விளையாடி வந்த தனலட்சுமியை வெளியேற்றி இருக்கிறார்கள் என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் தனலட்சுமி ரசிகர்கள். அதே போல இந்த வாரம் மணிகண்டனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தது பிக்பாஸ்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வீட்டில் இருப்பவர்களின் உண்மையான குணாதிசியம் இதுதான் என்று சொல்லுமாறு கமல் கூறுகிறார். அதற்கு விக்ரமன் வியாழக்கிழமை ஆனால் அசீம் சண்டை போட்டவர்களிடம் சென்று காபி போட்டுக் கொடுத்து நல்லவர் வேஷம் போடுகிறார் எனவே அவர் ஒரு பச்சோந்தி என சொல்ல, மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.