ரூ.60 லட்சம் சம்பளம்.. சொந்த முயற்சியால் கூகுளில் சேரும் பூஜிதா!

கூகுள், மைக்ரோசாப்ட் , பேஸ்புக் போன்ற நிறுவனங்களில் பணியாற்றவேண்டும் என்பது அநேகரின் விருப்பமாக இருக்கும். உலக அளவில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பை யார் விட நினைப்பார்கள். சம்பளத்தோடு அந்த நிறுவனத்தில் பணி என்பது பெரிய கவுரவமாக நினைக்கப்படுகிறது. அப்படி அனைவரையும் தேடி வராத ஒரு வேலை 22 இந்திய மாணவிக்கு வீடு தேடி வந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் வசித்து வரும் ரவூரி பூஜிதா என்ற மாணவி கூகுள் நிறுவனத்தில் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ரவூரி பூஜிதாவின் தந்தை ஆனஹிராவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரி ஒருவர் உள்ளார். தான் படிக்கும் பொது சொல்லித் தர யாரும் கிடையாது. சுயமாக படித்து வளர்ந்துள்ளார். சந்தேகங்கள் வரும் ஒவ்வொரு விசயங்களையும் தேடி தேடி படித்துள்ளார். இவர் பள்ளி முடித்துவிட்டு பொறியியல் படிப்பதற்காக ஜே.இ.இ. தேர்வு எழுதியுள்ளார். அதில் ஜார்க்கண்டில் உள்ள பிட்ஸ் மையத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என பெற்றோர் கேட்டு கொண்டதால், குண்டூரில் உள்ள கே.எல். பல்கலை கழகத்தில் பி.டெக் சேர்ந்துள்ளார்.

இவர் சேர்த்து முதல் ஆண்டு படிக்கும் போது கொரோனா வந்துவிட்டது. இதனால் நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துள்ளார். அதில் வரும் சந்தேகங்களை மூத்த மாணவர்கள் அல்லது ஆசியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். இல்லையென்றால் இணையத்தில் தேடி படித்துள்ளார். கோடிங் வகுப்புகளில் புரியாத விசயங்களை, யூ-டியூப் வீடியோக்களை பார்த்து தெரிந்துகொண்டுள்ளார். இதற்காக பல்வேறு தளங்களுக்கு சென்று கோடிங் பயிற்சியை மேற்கொண்டு, மாதிரி தேர்வுகளிலும் பங்கேற்றுள்ளார். இப்படி கோடிங்கில் சிறந்த ஆளாக மாறியவருக்கு கூகுள் , அடோப் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணியாற்ற இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதில் கூகுள் நிறுவன வேலையை பூஜிதா தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் ஊதியம் கொடுக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது சொந்த முயற்சியால் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஆந்திர மாணவிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

Leave A Reply

Your email address will not be published.