போலி ஆவணங்கள் வைத்து பி.டெக் படிப்பில் சேர்ந்த 40 மாணவர்களின் சேர்க்கை ரத்து!

உத்தரப் பிரதேசத்தில் போலி ஆவணங்களை வைத்து பி.டெக் படிப்பில் சேர்ந்த 40 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல்வேறு கிளைகளைச் சேர்ந்த 40 பி.டெக் மாணவர்களின் சேர்க்கையை மதன் மோகன் மாளவியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து பல்கலையின் துணைவேந்தர் ஜே.பி.பாண்டே கூறுகையில்,

மூன்று பேர் கொண்ட விசாரணை அறிக்கை முறைகேடு உறுதி செய்யப்பட்டதை அடுத்து 40 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்தாண்டு செப்டம்பரில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஒரு மாணவி போலி சேர்க்கைக் கட்டண ரசீது தயாரித்ததைக் கண்டறிந்தபோது, இந்த போலி வழக்கு குறித்து முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.

அதைத் தொடர்ந்து, அவரது சேர்க்கை ஒதுக்கீடு எண் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது மற்றும் வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், மாணவர் சேர்க்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது.

விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து, 2020-21 மற்றும் 2021-22 பேட்ச்களைச் சேர்ந்த 40 பி.டெக் மாணவர்களின் சேர்க்கையை இடைநிறுத்த கல்விக் கவுன்சில் பரிந்துரைத்தது.

இந்த மோசடியைத் தொடர்ந்து 2017-18 ஆம் ஆண்டு முதல் சேர்க்கை செயல்முறையை விசாரிக்க பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.