ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்ட த்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 207 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை அடித்தது. இதன்மூலம் 1 ஓட்ட வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.