பொங்கல் பண்டிகை: மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “உங்கள் அனைவருக்கும், குறிப்பாக உலகத் தமிழ் மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் வாழ்வில் மகிழ்ச்சியையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் தரட்டும். ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிராத்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.