யாழ். மாநகர மேயர் வேட்பாளராக வித்தியைக் களமிறக்குகின்றது தமிழரசு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

எனவே, வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ நாளிதழின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

‘உதயன்’, ‘சுடர்ஒளி’ ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியரான ந.வித்தியாதரன், சமூக விடுதலைக்காக – சமூக நீதிக்காக – தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திப் போராடியவர். ஊடகத்துறையில் கோலோச்சி நின்றவர். தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் – கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த காலகட்டத்தில், இவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன்பின்னர் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

ஸ்தம்பித நிலையில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக்குப் புத்துயிர் கொடுக்க முன்னின்று செயற்பட்டவர் இவர்.

Leave A Reply

Your email address will not be published.