தலாய்லாமா இலங்கைக்கு செல்ல சீனா எதிர்ப்பு.

இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர். அவரை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை.

இந்தநிலையில், அவரது இலங்கை பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள சீன தூதரகத்தின் உயர் அதிகாரி ஹு வெய், நேற்று கண்டியில் உள்ள செல்வாக்குமிக்க புத்தமத குருமார்களை சந்தித்தார்.

அவர்களிடம் ஹு வெய் கூறியதாவது:-

தலாய்லாமாவை எந்த நாடும் வரவேற்பதை சீன அரசும், சீன மக்களும், திபெத் மக்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனென்றால், அவர் கூறிக்கொள்வது போல் அவர் எளிமையான துறவி அல்ல. அவர் நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தின் தலைவர். ஆன்மிக தலைவர் என்ற பெயரில் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்து, சீனாவுக்கு எதிரான பிரிவினை செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சீனாவிடம் இருந்து திபெத்தை பிரிக்க முயற்சிக்கிறார்.

எனவே, இப்பிரச்சினையில் சீனா-இலங்கை இருதரப்பு உறவை பாதுகாக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.