கொழும்பு மேயர் பதவி போட்டிக்காக , MP பதவியை இராஜினாமா செய்யும் முஜிபுர் ரஹ்மான் (வீடியோ)

கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எண்பத்து நாலாயிரத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று தம்மை இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த அவர், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளுக்காக அச்சமின்றி நின்றதையும் நினைவு கூர்ந்தார்.

திட்டமிட்டபடி உடனடியாக தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தை வற்புறுத்துவேன் என்று கூறிய அவர், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதவி விலகுவதாக அறிவித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் சென்று ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்தார் முஜிபுர் ரஹ்மான்.

முஜிபுர் ரஹ்மானின் நிச்சயமான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

– Madushanka

Leave A Reply

Your email address will not be published.