விபத்துக்குள்ளான கல்லூரி மாணவர்களுக்கு உயிர் ஆபத்தில்லை: வானில் வந்த 7 பேரே பலியாகியுள்ளனர். (Video)

கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை கல்விப் பயணத்திற்காக ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது , நுவரெலியா நானுஒய்யா ரதெல்ல பிரதேசத்தில் வைத்து மலைப்பகுதியிலிருந்து பாதாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து, வானுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் வானில் வந்தவர்கள் மட்டும் உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் வந்த மாணவர்களுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை.


Leave A Reply

Your email address will not be published.