தம்மாம் விமான நிலையம் வழியாக பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு!!

விமான நிலையத்தில் சில பயணிகள் தாங்கள் கொண்டு வந்த கார்ட்டூன் பாக்ஸ் விமானம் அனுமதித்ததை விட சற்று பெரிதாக இருந்த காரணத்தால் அனுமதி அளிக்கவில்லை இதன் காரணமாக விமான நிலையத்தில் ஒரு கார்ட்டூன் 50 ரியால் செலுத்தி வாங்கி உள்ளார். இது போல் யாரும் சிரமப்படக்கூடாது என்பதற்காக இந்த பதிவு.

நாம் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில், எத்தனை கிலோ லக்கேஜ் எந்த அளவில் கார்ட்டூன் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள்.

பொதுவாக 1 pc என்றால் 23 கிலோ அளவாகும். கார்ட்டூன் (76 cms in length, 51 cms in width and 31 cms in height ) இந்த அளவு அல்லது இதற்குள்ளாக இருக்க வேண்டும்.

குறிப்பாக: Gulf Air விமானத்தில் பயணம் செய்பவர்கள் நான் மேலே குறிப்பிட்ட அளவை சரியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

மேலும் இது போல் சமீபத்தில் உங்களுக்கு ஏதேனும் அனுபவம் ஏற்பட்டதால் கமெண்டில் தெரிவியுங்கள் மற்றவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

Leave A Reply

Your email address will not be published.