உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியைக் காண ஒடிசா சென்ற உதயநிதி

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியைக் காண ஒடிசா சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக உதயநிதி மற்றும் தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த வியாழன் அன்று ஓடிசாவில் உள்ள உலக திறன் மையத்தை பார்வையிட்டனர். அங்கு உள்ள மேம்பட்ட குளிர்பதன ஆய்வகம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆய்வகம் போன்றவற்றையும் பார்வையிட்டனர்.

அதன் பின்னர் வெள்ளிக்கிழமை பிஜு ஆதர்ஷ் காலனிகளுக்கு சென்று நகர்ப்புற ஏழைகளின் வாழ்க்கையை மாற்றும் நோக்கில் ஒடிசா அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை உதயநிதி பார்வையிட்டார். பிஜு ஆதர்ஷ் காலனிக்கு உதயநிதி செல்லும் போது அங்குள்ள மக்கள் சங்கொலி முழங்கியும், குலவை ஒலி எழுப்பியும் தமிழக குழுவை வரவேற்றனர். பாரம்பரிய முறை படி விருந்தினர்களை வரவேற்ற இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்கு நடைபெற்று வரும் பணிகளை கவனித்த உதயநிதி, குடிசைவாசிகள் சங்கம் மற்றும் மிஷன் சக்தி சுய உதவிக்குழுக்களுடன் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.