2-வது போட்டியில் எளிதில் வெற்றி: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா.

இந்தியா நியூசீலாந்து அணிகள் இடையே இன்று 2-ஆவது ஒரு நாள் போட்டி ராய்பூரில் நடந்தது . ரோஹித் சர்மா டாப்ஸை வென்று நியூசீலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார் . இந்த மேட்சிங் ஹைலைட்ஸ் வீடியோ கீழே இருக்கு பாருங்க

இந்திய பவுலர்கள் முகமது சிராஜ் , முகமது ஷமியின் அபாரமான பந்து வீச்சு காரணமாக முதல் 10 ஓவர்களில் நியூசீலாந்து அணி வீரர்கள் 15 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்தனர்.

மேட்ச் துவக்கத்தில் பந்து ஸ்விங் ஆனாதால் , நியூசீலாந்து பேட்ஸ்மேன்கள் ரொம்பவே திணறினார்கள் . ஆனாலும் கொஞ்சம் நிதானமாக விளையாடாமல் அதிரடி ஆட்டத்தை தொடர நினைத்து வரிசையாக அவுட் ஆனார்கள் .

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பின் ஆலன் 0 ரன்கள் , டெவன் கான்வே, 7 ரன்கள் ஹென்ரி நிகோலஸ் 2 ரன்கள் , டேரில் மிட்சல் 1 ரன், டாம் லேதம் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்கள்.

முதல் போட்டியில் இந்திய அணி பவுலர்களை வெளுத்து வாங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் , இந்த போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றார் . ஆனால் 22 ரன்கள் எடுத்த போது முகமது ஷமி பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் . பிலிப்ஸ் 36 ரன்கள் , மிட்சல் சாண்ட்னர் 29 ரன்கள் எடுத்தனர் . 34.3 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்து ஆள் அவுட் ஆனது நியூசீலாந்து அணி . இந்திய பவுலர்கள் ஷமி 3 விக்கெட் , பாண்டியா , வாஷிங்க்டன் சுந்தர் 2 விக்கெட் , சிராஜ் 1 விக்கெட், குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தனர்.

இந்திய அணி துவக்க பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, சுப் மன் கில் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் எடுத்து அவுட் ஆனார் . விராட்கோலி 11 ரன்கள் எடுத்த போது சான்ட்னர் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.

சுப்மன் கில் இறுதி வரை அவுட் ஆகாமல் 40 ரன்கள் எடுத்தார் . இந்திய அணி 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து மிக சுலபமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.