ஓபிஎஸ், இபிஎஸ்.. பாஜக ஆதரவு யாருக்கு..? அப்டேட் சொன்ன அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.

அதிமுகவின் எடப்பாடி தரப்பு போட்டிக்கான ஆயத்த பணிகளில் இருக்க, நாங்களும் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து கூட்டணி கட்சியினரிடையே அதிமுகவின் இரு தரப்பினரும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று அண்ணாமலையை எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் என இரண்டு தரப்பினரும் சந்தித்து ஆதரவு கோரினர். இந்த சந்திப்பை முடித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தேச நலன் குறித்து பேசியதாகவும் சந்திப்பு தனக்கு திருப்திகரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதா அல்லது போட்டியிடுவதா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தேசிய தலைமை முடிவு செய்த பிறகு நாளை கண்டிப்பாக செய்தியாளர்களை சந்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.