ஜேர்மன் A தரத்துக்கான பெட்மின்டன் போட்டிகளில் கலக்கும் தமிழ் குழந்தைகள்

ஜேர்மன் தழுவிய A தரத்துக்கான பூப்பந்தாட்ட போட்டிகள்  கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகரில் இடம் பெற்றது.

அங்கு நடந்த 11 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் , அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ஹர்சாத்குமார் கார்த்திக் முதன்மை இடத்தை பெற்று பார்வையாளர்களது கரகோசத்தை பெற்றார்.
அதே பிரிவின் பெண்கள் பிரிவில் அரையிறுதிவரை சிறப்பாக ஆடிய போதும் , தமிழி மார்க்கண்டு 3வது இடத்தையே பெற முடிந்தது.

11 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவிலும் பங்கு கொண்ட தமிழி மார்க்கண்டு 2வது இடத்தை பெற்றார்.

  • ஜேர்மனியிலிருந்து சசி

Leave A Reply

Your email address will not be published.