விஜய் டிவியின் பிரபல தொடரில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஷிவின்.

முடிவடையும் தருவாயில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது ஷிவின் நடிக்க இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் முக்கிய தொடராக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விரைவில் முடிவடைய இருக்கிறது.

இந்த சீரியலில் பல திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. குறிப்பாக இத்தனை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் இணைந்து இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் மீண்டும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதனால் தற்போது சீரியலில் திருமண வைபவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் அவர் நடிக்க இருக்கும் தகவல் உறுதியாகி இருக்கிறது. அவருடன் சேர்த்து ஆர் ஜே பாலாஜி உள்ளிட்ட சிலரும் நடிக்க இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆரம்பத்தில் வேறு விதமாக கதையை ஆரம்பித்த இயக்குனர் தற்போது கதையை எங்கே எங்கேயோ கொண்டு சென்று விட்டார். தற்போது கதைப்படி பாரதிக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விடுகிறது.

இதனால் மீண்டும் கண்ணம்மாவுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு அவர் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் கதை உடனே முடியும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தது. அதன்படி மீண்டும் கதை சிறிது வழவழவென இழுத்துக் கொண்டே செல்கிறது. கதைப்படி மீண்டும் பாரதியும் கண்ணம்மாவும் திருமணம் செய்ய இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்த ஷிவின் தற்போது கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கேரவனில் அமர்ந்து கொண்டிருக்கும் அவர் அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து பாரதி கண்ணம்மா என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்தத் திருமண நிகழ்ச்சியுடன் இந்த சீரியல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஏற்கனவே பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள தாமரை சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். தற்போது சிறப்பு தோற்றங்களாக சில நடிகர்களை உள்ளே இறக்கி இருக்கிறார் இயக்குனர். அதன்படி ஆர் ஜே பாலாஜி, பிக் பாஸில் மூன்றாவது இடத்தை பிடித்த ஷிவின் ஆகியோரை உள்ளே இறக்கி இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

ஷிவினே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாரதி கண்ணம்மா சூட்டிங்கில் இருப்பதாக ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இதனால் பாரதி கண்ணம்மாவின் திருமணத்திற்கு இவர்கள் அனைவரும் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.