லியோ பட பாணியில் காதலர் தினத்துக்காக , கஞ்சா கலந்த சொக்லட்

கஞ்சா கலந்த சாக்லேட்டை தயாரித்து வெளியிட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கஞ்சா கலந்த சாக்லேட்டை காதலர் தின சந்தைக்காக உருவாக்கப்பட்டதாகவும், பல சமூக ஊடகளில் அது குறித்து பிரச்சாரப்படுத்தப்பட்டதாகவும் ஆயுர்வேத திணைக்களத்தின் மருத்துவர் பி தரங்கா தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி இந்த சொக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்களை இலக்கு வைத்து பல விளம்பரங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் ஆயுர்வேதப் பெயரைப் பயன்படுத்தி ஆயுர்வேதமற்ற மருந்தை விளம்பரப்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் நெறிமுறையற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக ஆயுர்வேதத்தின் பெயரைக் குறிப்பிடும் போது மருந்துகள் அல்லது உணவுப் பொருளை உற்பத்தி செய்வதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் முன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிதாக தயாரிக்கப்படும் மருந்து அல்லது உணவுக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், அதனை மறு ஒப்புதலுக்கு கமிட்டி’யிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.