கொள்ளுப்பிட்டிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 பேர் தனிமைப்படுத்தல்

சோசலிச முன்னணி கட்சியின் போராட்டத்தை கட்டுப்படுத்த ஈடுபட்டிருந்த கொள்ளுப்பிட்டிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைவாக கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முன்னணி சோசலிஷ கட்சியின் உறுப்பினர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.