தீவிரமாய் பரவும் காய்ச்சல்…இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க…!

சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு(IMA) சுற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது, நாடு முழுவதும் H3N2 வைரஸ் பரவி பருவகால காய்ச்சல், சளி, இருமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் இருக்கும். காய்ச்சல் சென்றாலும் இருமல் தொல்லை 3 வாரம் வரை தொடரலாம்.

பொதுவாக இந்த பருவ கால காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயதுக்கு குறைவானர்கள் மத்தியில் தான் அதிகம் காணப்படும். இந்த நோய் காற்று மாசு காரணமாக சுவாச தொற்றாக ஏற்படுகிறது. எனவே, பருவ கால சளி காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்து மாத்திரைகளை தர கூடாது.

எனவே, நோயாளிகள் Azithromycin and Amoxiclav இந்த பருவ கால வைரஸ் காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை. பல ஆன்டிபயாட்டிக்குகள் நோயாளிகளிடம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, 70 சதவீத டயரியா பாதிப்புகள் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.

ஆனால் அவர்களுக்கு amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தவறாக பிரயோகம் செய்கிறார்கள். எனவே, மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருக்குமாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.