மதுரையில் மாநாடு -ஆன்மீக அரசியல் ஆரூடம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும்,கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி ஆரம்பித்த பின்னர் மதுரையில் மாநாடு நடத்துவார் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவின்றன.

திரு. ஸ்டாலின் தலைவராக உள்ள தி.மு.க. கட்சியில் சமீபத்தில் பொதுச் செயலர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கும் தேர்வான துரைமுருகன் டி.ஆர்.பாலு ஆகிய இருவருக்கும் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கட்சியில்  உள்ள தன் ரசிகர்களையும், ஸ்டாலின் எதிர்ப்பாளர்களையும் ஒரு சேர கவரவே இவ் வாழ்த்து செய்தியின் நோக்கம் என கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்..

இதன் தொடர்ச்சியாகவே கட்சி ஆரம்பிப்பார் என்றும், மதுரையில் மாநாடு என்றும் அரசியல் வானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.