சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்னில் நடைபெறும் பூப்பந்தாட்ட போட்டிக்கான அழைப்பு

எதிர்வரும் ஈஸ்டர் விடுமுறை நாட்களான ஏப்ரல் 08 மற்றும் 09ம் திகதிகளில் சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்னில் (Bern) உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் எட்டாவது தடவையாக நடத்தப்படும் Badminton போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 280 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பிரித்தானியாவில் இருந்து மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவில் இன்னும் போதுமான அளவு போட்டியாளர்கள் பதிவு செய்யவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ள நிலையில் , விண்ணப்ப முடிவு திகதியை 16.3.2023 என இன்று வரை நீடித்துள்ளனர்.

எனவே உங்களுக்கு தெரிந்த பெண் போட்டியாளர்கள் சிறுவர்கள் சிறுமிகள் இருந்தால் அவர்களுக்கும் இந்த விடயத்தை பகிர்ந்து பங்கு கொள்ளுமாறு உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை மேலும் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு எமது இணையதளத்தை பார்வையிடவும்
www.wtbf.net

அத்துடன் போட்டி சம்பந்தமான விவரங்களுக்கு அதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் பார்வையிடலாம்.
www.wtbt2020.wordpress.com

Leave A Reply

Your email address will not be published.