முல்லைத்தீவு தொழிற்சந்தை வழிகாட்டல் பதிவுகள்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தொழில்த்துறையில் வழிகாட்டிடும் நோக்கில் இன்றைய தினம் (16.03.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை நடைபெற்றது.

இந்த தொழிற்சந்தை திறப்பு நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் திறந்து வைத்தார்.

UOULEAD, Federal Ministry of Economic Cooperation and Development , Child Fund Sri Lanka, Voice, ORHAN, BERENDINA நிறுவனங்களின் அனுசரணையிலும் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஒழுங்கமைப்பிலும் இந்த தொழிற்சந்தை இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் வழிகாட்டல் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டல், உயர்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி வழிகாட்டல், சுய தொழிலை ஆரம்பித்தல் முதலான பல்வேறு வழிகாட்டல்களை உள்ளடக்கியதாக இந்த தொழிற்சந்தை அமைந்திருந்தது.

இந்த தொழிற்சந்தைக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.