குருந்துமலை ஆலயத்தின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்றுத் தலங்களில் ஒன்றான முல்லைத்தீவு குருந்துமலை ஆலயத்தின் மேற்கு எல்லையில் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் காணியை, உடனடியாக விடுவித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அவர்கள் நேற்று (22) அறிவித்துள்ளார்.

இந்த காணிகள் முல்லைத்தீவு தண்ணிமுறுப்பு பிரதேசத்தில் அமைந்துள்ளன.

இது தொடர்பான கடிதம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தொல்பொருள் உதவி ஆணையாளர் ஆகியோருக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆய்வுகளின் பின்னர், தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள 229 ஏக்கர் காணியை அளவீடு செய்வதற்கு தொல்பொருள் உத்தியோகத்தர்களால் , நில அளவையாளர்கள் அழைக்கப்பட்டதையடுத்து, அளவீட்டு உத்தரவை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அலுவலகம் மற்றும் புத்தர் ஆலயம் அமைப்பதற்காக புத்தர் சிலையை எடுத்துச் சென்ற போது, தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, இதற்கு அருகாமையில் இடம்பெற்ற அதே சம்பவத்தினால் புத்தர் சிலையை பொலிஸில் வைப்பிலிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.