குவைத்தில் பெய்த மழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

குவைத்தில் நேற்று விடியற்காலை முதல் தொடங்கிய மழை நேற்று மத்தியானம் முதல் பலத்த மழையாக பெய்த தொடங்கியது. இடி மற்றும் மின்னலும் ஏற்பட்டது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது

இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் இரவு தெரிவித்துள்ளது. ஃபர்வானியா, ஹவாலி, குவைத் சிட்டி மற்றும் ஜஹ்ரா கவர்னரேட்டுகள் வழியாக செல்லும் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பல பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குளங்கள் போல் தேங்கியுள்ளன. சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் தலைமையில் தண்ணீர் தேங்கியுள்ள சாலைகள் சரிசெய்யும் வேலைகளை செய்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல் காலித் அல் சபா தலைமையில் பல்வேறு பகுதிகளின் நிலைமையை பார்வையிட்டார். இன்று(27/03/23) திங்கள்கிழமை வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.