பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 19 பந்தில் 41 ரன்கள் குவித்தார். அதன்பின், 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடியது தென் ஆப்பிரிக்கா. ஹென்ரிக்ஸ் தனி ஆளாக போராடினார். அவர் 44 பந்தில் 83 ரன்கள் குவித்தார்.

ரூசோ 21 பந்தில் 42 ரன்கள் விளாசினார். மார்கிரம் 18 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார். இறுதியில். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து தோற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது அல்ஜாரி ஜோசபுக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகனாக ஜான்சன் சார்லஸ் அறிவிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.