இன்று முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 777 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பரவல் அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மட்டுமன்றி அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.