இந்தியப் பத்திரிகையாளர்கள் சீனாவிற்குள் செல்ல தடை!

சீனாவில் பணியாற்றும் இரு இந்தியப் பத்திரிகையாளர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் பணியாற்றிய 3 சீனா பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை வெளியேற்றியது.எனினும் டெல்லியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்திலும், வாரணாசியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் சீன பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், சீனாவில் பணியாற்றி வரும் தி திந்து மற்றும் பிரசார் பாரதி ஆகிய நிறுவனங்களின் பத்திரிகையாளர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.இருவரும் தற்போது இந்தியாவில் உள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சீன பத்திரிகையாளர்களின் விசா 3 மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. அதை ஓராண்டாக நீடிக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.