இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000-ஐ கடந்த கொரோனா தொற்று !

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,435 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு சீனாவில் முதல் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. இதனால் கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், கொரோனா தொற்றை எதிர்கொள்ளத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று அதிகரித்தது. அதனை எதிர்கொள்ளும் வகையில் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுப்பட்டு பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காணப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,435 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று காரணமாக 23,091 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,508 ஆக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.