ரணில் ஏன் ஆட்சியைப் பொறுப்பேற்றார்? – மஹிந்த விளக்கம்.

“ராஜபக்சக்களைப் பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவில்லை. அவர் நாட்டை முன்னேற்றவே ஆட்சியைப் பொறுப்பேற்றார்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கடமையைத் திறம்படச் செய்கின்றார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். அதன் பெறுபேறாக சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியை இலங்கை பெற்றுள்ளது.

ரணிலின் நல்லெண்ண செயற்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கும்.

நாட்டுக்கு நன்மை செய்பவர்கள் மீது சிலர் கல்லெறிவார்கள். அதேபோல்தான் ரணிலும் விமர்சனங்களை எதிர்கொள்கின்றார். ராஜபக்சக்களும் கடந்த காலங்களில் இவ்வாறான விமர்சனங்களை எதிர்கொண்டார்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.