இந்தியாவில் 2-வது முறையாக ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்தார் டிம் குக்!

இந்தியாவில் 2-வது முறையாக ஆப்பிள் ஸ்டோரை அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக் திறந்து வைத்தார்.

கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா தொற்று தொடங்கிய பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் ஆப்பிள் வருவாய் வீழ்ச்சியடைந்தது. ஐபோன் தயாரிப்பாளருக்கான வருவாய் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 5 சதவீதம் சரிந்து அக்டோபர் மற்றும் டிசம்பர் இடையே $117 பில்லியனாக இருந்தது.

இருப்பினும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வணிகம் நன்றாக இருந்தது. அமெரிக்காவில் ஒட்டுமொத்த காலாண்டு வருவாய் வீழ்ச்சியை விட, இந்திய சந்தையில் ஆப்பிள் சிறப்பாக செயல்பட்டது.

இது குறித்து, தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில்,

இந்தியா மிகவும் உற்சாகமான சந்தையாகும். மேலும் வணிகத்தை வலுப்படுத்த, குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமானது விரைவில் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடையைத் திறக்கும் என்றார்.

2-வது ஆப்பிள் ஸ்டோரை திறந்த டிம் குக்
கடந்த 18ம் தேதி ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியாவில் முதல்முறையாக, மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்தார்.

இந்நிலையில், 2-வது முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையத்தை டெல்லியில் இன்று திறந்து வைத்தார் அந்நிறுவன தலைவர் டிம் குக்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.