நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது.

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்; வெள்ளிக்கிழமை வரை அமர்வுகள் நடைபெறவுள்ளது!

இன்று கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுத்தாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பமாகும்.

இதன்படி மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன பற்றி சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாளை புதன்கிழமை உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாளைமறுதினம் வியாழக்கிழமை துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 03 ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 06 தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

நாளை புதன்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் பி.பகல் 7.30 மணி வரையும், நாளைமறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் பி.பகல் 7.30 மணிவரையும் அமர்வுகள் நடைபெறும்.

எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 மணி முதல் பி.பகல் 6.30 மணிவரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.