நாங்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் மாறினாலும் கொள்கை மாறவில்லை – விமல் கூறுகின்றார்.

நாட்டை நாசமாக்கிய மஹிந்த தலைமையிலான அணியுடன் ஒருபோதும் இணையமாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. அதுதான் முக்கியம். ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஓரிடத்தில் பேசுகின்றார் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்று. இன்னோர் இடத்தில் பேசுகின்றார் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் போகக்கூடாது என்று. அவர்கள் ஓரிடத்தில் இருந்தாலும் கொள்கையில் நிலையாக இல்லை.

நாங்கள் இடம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல. இது எமக்கு சாதகமான கொள்கை அல்ல. இதனால் எதிரிகள் அதிகம் வளருவார்கள். எதிர்ப்புகள் கூடும். எமக்கு எதிரான தாக்குதல்கள் கூடும். உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

நாட்டை நாசமாக்கிய மஹிந்த தலைமையிலான அணியுடன் இணையமாட்டோம். அது ஒருபோதும் நடக்காது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.