பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி குஜராத் திரில் வெற்றி.

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கில் , விருத்திமான் சஹா களமிறங்கினர் . தொடக்கத்தில் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார். சஹா , பாண்டியா இணைந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர்.

அணியின் ஸ்கோர் 72ரன்னாக இருந்தபோது சஹா47 ரன்களில் வெளியேறினார், அடுத்து வந்த அபினவ் மனோகர் 3 ரன்களில் , விஜய் சங்கர்10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.மறுபுறம் பொறுப்புடன் ஆடிய பாண்டியா அரைசதம் அடித்தார், பின்னர் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட பாண்டியா 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 135ரன்கள் எடுத்தது . லக்னோ சார்பில் குருனால் பாண்டியா , ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 136 ரன்களுடன் லக்னோ விளையாடியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் , கைல் மேயர்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். சிறப்பாக ஆடி தொடக்க விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில் மேயர்ஸ் 24 ரன்களில் ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த குருனல் பாண்டியா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மறுபுறம் நிலைத்து ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார்.மறுபுறம் பூரன் 1 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை குஜராத் அணியின் மோஹித் சர்மா வீசினார்.

கே.எல். ராகுல் மற்றும் படோனி களத்தில் இருந்தனர். முதல் பந்தில் 2 ரன் எடுத்த ராகுல் அடுத்த பந்தில் 68 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டாய்னிஸ் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து படோனி , ஹூடா , இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனார். இறுதில் 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 128ரன்கள் எடுத்து லக்னோ அணி தோல்வி அடைந்தது. இதனால் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.