ஜனாதிபதித் தேர்தல் பற்றி சிலர் அவசரப்பட்டு கருத்து – அமைச்சர் பந்துல விசனம்.
“அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தல் குறித்து சிலர் அவசரப்பட்டு கருத்து வெளியிட்டு வருகின்றனர்” – என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசு இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை.
மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் சிலர் தமது சொந்தக் கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.
அந்தக் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவர்கள் தமது சொந்தக் கருத்துக்களை – தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளையே வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் மொட்டுக் கட்சி ஒன்றுகூடி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்.
வெற்றிபெறக்கூடிய சிறந்த வேட்பாளரே களமிறங்குவார். அவர் யார் என்று இப்போது தெரியாது.” – என்றார்.