கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன்.

தாராவி ஏ.கே.ஜி. நகர், கோபால் மிஸ்திரி சால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ரன்சுமர் (வயது45). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ரேணு (28). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். ரேணுவுக்கு கணவரின் நண்பருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சுரேஷ் ரன்சுமர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது குழந்தை பசியால் அழுது கொண்டு இருந்தது. ரேணு குழந்தைக்கு சாப்பாடு கொடுக்காமல் கள்ளக்காதலனுடன் செல்போனில் சாட் செய்து கொண்டு இருந்தார்.

இதன் காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரேணு, கணவரை ஆண்மை இல்லாதவன் என திட்டியதாக கூறப்படுகிறது. இது அவருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவர் வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தினார். பின்னர் அவர் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்து மனைவியை கத்திரி கோலால் குத்தியதாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடினார். கழுத்தில் கத்திரிக்கோல் குத்தியதால் பெண்ணாலும் பேசமுடியவில்லை.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பெண்ணை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற சாகுநகர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர், மனைவியை கொலை செய்த சம்பவம் தாராவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.