அரசிலிருந்து நிச்சயம் வெளியேறுவேன்! – மொட்டு எம்.பி. ஜகத் குமார எச்சரிக்கை.

“சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படுமானால் இந்த அரசில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“வறியவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே சமுர்த்தி வேலைத்திட்டம் உள்ளது. அதனை இல்லாது செய்வதற்கு இடமளிக்கப்படக்கூடாது. அதற்கு நான் எதிர்ப்பை வெளியிடுவேன்.

இது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினேன். சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படமாட்டாது, சமுர்த்தி அதிகாரிகளின் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்த உறுதிமொழி மீறப்படுமானால் நான் அரசில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்.

சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.