வடமேல் மாகாணத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது தடை!

வடமேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் (Department of Animal Production and Health)தெரிவித்துள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் வடமேல் மாகாணத்தின் பதில் பணிப்பாளர் பி.சி.எஸ்.பெரேரா குருநாகலின் பல பிரதேசங்களில் கால்நடைகளுக்கு பரவும் தோல் நோய் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த தோல் நோய் தொற்று நோயாக மாறவில்லை என இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.