சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு.

உலகப் புகழ் பெற்ற தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி.வெங்கடேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை துணை உயர் ஸ்தானிகர் , ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு வருமாறு ரஜினிகாந்த்துக்கு இலங்கை துணை உயர் ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார். அவரது விஜயம் சினிமா தொடர்பான சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்பதால் இலங்கைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரத்தியேகமான ‘இராமாயணப் பாதை’ மற்றும் இலங்கையின் தனித்துவமான பௌத்த ஸ்தலங்களை ஆராயுமாறு இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் தனிப்பட்ட முறையில் அவருக்கு அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.