12 வயதாக இருக்கும் போது தந்தையை கொன்றவனை 19 வயதான பின் கொன்ற இளைஞன்.

12 வயது குழந்தையாக இருக்கும் போது கண்ணெதிரே தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை , 07 வருடத்தின் பின் 19 வயதான பின் பழிக்கு பழி வாங்க தந்தையை கொன்றவனை கொன்றுவிட்டு
தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதை கண்ணெதிரே பார்த்த 12 வயது குழந்தையொருவர், தனது தந்தையை சுட்டுக்கொன்ற கொலையாளியை ஏழு வருடங்களின் பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுபொலிஸாரிடம் போலீசில் இளைஞர் ஒருவர் சரணடைந்துள்ளார்.

செய்திகளின்படி, சம்பவம் பின்வருமாறு.

கடந்த 21ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூச்சி கிராம வீதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றிரவு 9.50 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றது. அம்பாந்தோட்டையைச் சேர்ந்த கொடிதுவக்குகே சாகர என்ற 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இரண்டு கொலைகள் உட்பட பல குற்றங்களில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை, சுச்சி கிராமத்தில் உள்ள தேவாலய வீதியில், வீதியின் குறுக்கே உள்ள வீதித் தடையைக் கடந்து செல்ல தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் குறைத்தபோது, உயிரிழந்தவர், தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த போதே சுடப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, கொலையாளி தப்பி ஓடிவிட்டார். கொலையாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

இதேவேளை கடந்த 29ஆம் திகதி 19 வயதுடைய இளைஞன் இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளார். பந்தகிரிய கிராமத்தைச் சேர்ந்த மணம்பேரிகே சமோத் நிம்சரய என்ற இளைஞரே கடந்த 21ம் தேதி இரவு கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை பொலிஸார் சந்தேக நபரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆரம்பித்தனர். நீண்ட வாக்குமூலத்துக்கு இடையே அந்த இளைஞர் போலீசாரிடம் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

“சேர்.. அது 2016 வருஷம்… எனக்கு அப்போது 12 வயது. நானும் என் தந்தையும் மாட்டு கொட்டகைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்த அயோக்கியன் என் கண்ணெதிரே என் தந்தையை சுட்டுக் கொன்றான். ”

“12 வயதில் , நான் என்ன செய்வேன்? இந்த குற்றத்திற்கு எப்போதாவது பழிவாங்குவேன் என்று நினைத்தேன். 07 வருடங்களின் பின்னர் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. என் தந்தையைக் கொன்றவனை நான் சுட்டுக் கொன்றேன்.

வாக்குமூலங்களைப் பதிவு செய்த அம்பாந்தோட்டை பொலிஸார் 19 வயதுடைய சந்தேக நபரை நேற்று (30) மாலை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாந்தோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஓஷத மிகார மஹ ஆராச்சி (30) மாலை உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.